நயன் தாரா நடித்த இமைக்கா நொடிகள், ரஜினிகாந்த் நடித்த தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பேபி மானஸ்வி. மிக க்யூட்டாக பேசுவதில் அசத்தும் இந்த பேபி. இமைக்கா நொடிகள் படத்தில் இவரது நடிப்பு பலரால் ரசிக்கப்பட்டது.
நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகளான இவர் சமீபமாகத்தான் சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 21 நாள் ஊரடங்கு ஒட்டிஅரசு, மருத்துவர்கள், போலீஸ் அறிவுரையை மீறி வெளியே தேவையில்லாமல் வருபவர்களை விட்டு விளாசுகிறார் பேபி தேஜஸ்வினி.
டிவியில பேப்பர்ல எல்லாரும் சொல்றாங்க. நீங்க ஒரு தடவை சொன்னா கேக்கவே மாட்டிங்களா? வெளியில போகாம இருந்தாத்தான் எல்லாராலயும் எல்லா வேலையும் பார்க்க முடியும் நிலைமை சீராகும். எல்லாரும் ஆபிஸ், ஸ்கூலுக்குலாம் போக முடியும் என்னாலயும் ஸ்கூல் போக முடியும்.
நீங்க வெளியில போகாம இருந்தாதான் இந்த கொரோனா குறையும்.மனசுக்குள்ள மட்டும் கொரோனா கொரோனானு வேண்டுனா மட்டும் போதாது என சாட்டையடியாக பேசியுள்ளார் இவர்.