கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் அறிமுகமானவர் சேதுராமன். 36 வயதான இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது.
பழகுவதற்கு இனியவர் என்று எல்லோராலும் அழைக்கப்படும் சேதுராமன் ஒரு தோல் மருத்துவர். அடிக்கடி தோல் மருத்துவ விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருபவர்.
இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் கூட. சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா படங்களில் நடித்திருக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இவர் திடீரென நேற்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சந்தானம் ஆழ்ந்த துயரத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். நடிகை குஷ்புவின் இன்ஸ்டாகிராம் பதிவில் அழகான சிரித்த முகம் திரும்ப எப்போது பார்க்க போகிறேனோ என கண்ணீர் பதிவு இட்டுள்ளார்.