கொரோனா விடுமுறையால் பலரும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். என்ன செய்வது என தெரியாமல் பிரபலங்கள் பலரும் வீடியோக்கள் வெளியிடுவதும் தன் ரசிகர்களிடம் பேசுவது என இருக்கின்றனர்.
இசையமைப்பாளர் எஸ்.எஸ் கீரவாணி என அழைக்கப்படக்கூடிய இவர் தமிழில் மரகதமணி என்ற பெயரில் பல படங்களுக்கு இசையமைத்தவர்.
இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலியின் அண்ணனான இவர் பாகுபலி சீரிஸ் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இவர் இளையராஜாவின் ஒரு பாடலை பாடி அவரை போற்றி புகழ்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இளையராஜா ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.