கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் அறிமுகமாகி வாலிப ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் சேதுராமன். 37வயதான இவர் திடீர் மாரடைப்பில் நேற்றிரவு மறைந்தார்.
பலருக்கும் இவரது மரணம் அதிர்ச்சியை அளித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் ஒரு இணைய சேனலுக்கு கொரோனா விழிப்புணர்வுக்காக ஒரு நீண்ட பேட்டியே கொடுத்துள்ளார் இவர்.
கொரோனா விழிப்புணர்வு வீடியோவும் வெளியிட்டுள்ளார். இவரது இறுதிச்சடங்கு சற்றுமுன் நடந்தது அதில் நடிகர் சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் சந்தானம் மிகவும் கலங்கிய நிலையில் காணப்பட்டார். நண்பர் சேதுராமனை அவரும் சுமந்து வந்தார்.