நடிகர் விவேக் இவர் சிறப்பான சமூக சேவகர் .நகைச்சுவை படங்களில் அதிகம் நடித்து வந்தாலும் அவ்வப்போது ஏதாவது குணச்சித்திர வேடத்தில் நடிப்பார். கடந்த 2000ல் வெளிவந்த அலைபாயுதே படத்தில் காமெடியே இல்லாத ஒரு சாதாரண வேடத்தில் நடித்தார்.
கடந்த 2019ல் இவர் நடிப்பில் வெளிவந்த வெள்ளைப்பூக்கள் படம் நல்லதொரு வெற்றியையும் விமர்சனங்களையும் பெற்றது.
இந்த படத்துக்கு சமீபத்தில் ரசிகர் ஒருவர் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்.
வெள்ளைப்பூக்கள் படம் பார்த்தேன். கேபி அவர்கள் கண்டெடுத்த பூ கலாம் அவர்களின் கை பட்டு பூ காய்யாகி காய் கனியாகி கனி விதையாகி அந்த விதை இன்று பல மரங்களை நடுகிறது நடவைக்கிறது. அருமையான நடிப்புசார் சின்ன கலைவாணர் இன்று முதல் சின்ன கலாம் ஆனார் . இப்படியாக பதிவிட்ட ரசிகருக்கு நடிகர் விவேக் நன்றி தெரிவித்துள்ளார்.