தற்போது உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு விசயம் கொரோனா கொரோனா என்பதுதான். கொடுமையான இந்த வைரஸ் சீனாவில் உள்ள ஊகான் நகரத்தில் இருந்து பரவியது முதல் மனிதர்கள் தூக்கத்தை தொலைத்து இருக்கின்றனர்.
சீனாவை தொடர்ந்து இத்தாலிதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாகும்.
இந்நிலையில் கொரோனா பாதிக்கப்படாமல் இருக்க பலரும் குரல் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பிக்பாஸ் மூலம் 3 மாதங்களில் உலகத்தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த லாஸ்லியா ஆரியின் படமொன்றிலும் ஹர்பஜன் சிங்கின் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
ஷூட்டிங்கில் மாஸ்க் அணிந்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு எல்லோரும் பாதுகாப்பாக இருக்கும்படி தனது இன்ஸ்டா பக்கத்தில்வெளியிட்டுள்ளார் இவர்.