சந்தானம் லொள்ளுசபா மூலம் தமிழ்நாட்டுக்கு அறிமுகமாகி அவர் முதலில் நடித்த மன்மதன் படம் மூலம் எல்லோருக்கும் தெரியலானார். கவுண்டர் பாணியில் கவுண்ட்டர் அடித்து பேசும் சந்தானம் எளிதில் நகைச்சுவை நடிப்பால் மக்களை கவர்ந்தார்.
இந்நிலையில் சில வருடங்களாக தொடர்ந்து ஹீரோ வேஷம் மட்டுமே கட்டும் சந்தானம் நகைச்சுவை வேடங்களில் தனியாக நடிப்பதில்லை.
சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் அவ்வளவாக போகாத நிலையில் அவர் நடித்த ஏ 1 படம் மட்டும் ஆவரேஜாக வெற்றியடைந்தது.
இந்த படத்தை இயக்கியவர் ஜான்சன் இப்போது இதே கூட்டணியில் சந்தானம் மீண்டும் இணைந்துள்ளார். ஜான்சன் உடனேயே மீண்டும் அடுத்த படத்தை ஆரம்பித்துள்ளார் சந்தானம்.