பயணங்கள் முடிவதில்லை, அம்மன் கோவில் கிழக்காழே, மெல்ல திறந்தது கதவு, ராஜாதி ராஜா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்தும் பல படங்களில் நகைச்சுவை , குணச்சித்திரம் கலந்தும் நடித்திருப்பவர் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன்.
அதிமுகவில் பேச்சாளராக இருக்கும் இவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் பேசி இருந்தார். இவ்வளவிற்கும் ரஜினியை வைத்து ராஜாதி ராஜா என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தவர் ஆர் சுந்தர்ராஜன்.
ரஜினி முதல்வர் ஆவது பற்றி அவதூறாக பேசிய இயக்குனர் சுந்தர்ராஜனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் எஸ்.வி சேகர் ஒரு பதிலடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஏன் இப்டிலாம் பேசறிங்க ,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ கூட சொல்வாங்க வியாதிக்காரன் வாந்தி எடுத்தது மாதிரி நிறைய பேசாதிங்க கொஞ்சமா பேசினாலும் கருத்தாக பேசுங்க என சொல்வார். அது மாதிரி குறைத்து பேசுங்க மைக் கிடைச்சா என்ன வேணாலும் பேசலாம்னு நினைக்கிறது ஒரு வியாதி என கூறியுள்ளார்.
நிறைய பணம், புகழ் சம்பாதிச்சிங்க நல்ல பெயர் குணத்தை சம்பாதிக்கல நீங்க, கடவுள் நம்பிக்கையில்லாத உங்களை போல பலருக்கு தான் என்ற அகந்தை வருகிறது. ரஜினி முதல்வரா வருவாராங்கிறது ஆண்டவன் எழுதிய விதி. நீங்க அதை அவதூறா பேசணும்னு தேவையில்லை என்று கூறியுள்ளார்.அந்த வீடியோ இதோ.