நடிகர் சங்கத் தேர்தல் நடக்குமா? நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் செல்லாது என அறிவிக்கக்கோரி பாக்கியராஜ் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை…


2cdff8c01f73d02c66551aaf833bab8b

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் செல்லாது என அறிவிக்கக்கோரி பாக்கியராஜ் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என அறிவித்தது. இதனை அடுத்து விரைவில் நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து விஷால் தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். இதனையடுத்து தற்போது வந்துள்ள தகவலின்படி நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது இதனால் நடிகர் சங்க உறுப்பினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன