சமூக வலைதளங்களில் பெரிய நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் ரசிகர்களுடன் பயணிக்கின்றனர் . இதில் சில ரசிகர்கள் ஓவராக சென்று குறிப்பிட்ட பிரபலங்களை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர்.
இது குறித்து ரசிகர் ஒருவர் விவேக்கிடம் கேள்வி கேட்டுள்ளார் அதற்கு பதிலளித்த விவேக்,
வலைத்தளத்தில் 100 பேரில் 98 பேர் நேர்மறையோரே! 2 பேர் எதிர்மறையோர் இருக்கலாம்.அவர்களை அலட்சியம் செய்யப் பழகுங்கள்.சாதனையாளரை பிரபலங்களை பழித்தும் இழித்தும் பதிவிடுவதில் அவர்கள் சுகம் காண்பர். புலி தன் காயத்தை நக்கி ஆற்றும்; குரங்கு தன் புண்னை பிய்த்து ரணமாக்கி இறக்கும்.அவரவர் வழி .இவ்வாறு கூறியுள்ளார்.