அந்த காலங்களில் ஹிந்தி பாடகிகளில் லதா மங்கேஷ்கர்,மற்றும் ஆஷா போன்ஸ்லே குரல் இனிமையாக திரைப்படங்களில் ஒலித்தது. இவர்கள் தமிழில் பாடினாலும் தமிழ் முழுமையாக வராவிட்டாலும் கூட இவர்களின் குரலில் வசீகரம் இருக்கும்.
2000ங்களுக்குபிறகு ஒரு பாடகியின் குரலில் பலர் சொக்கி போய் கிடக்கிறார்கள் அவர்தான் ஸ்ரேயா கோஷல். தேனில் ஊறிய பலாச்சுளை போல இவரது குரல் மிக இனிப்பாக இருப்பதே பலருக்கு ஸ்ரேயா கோஷலின் பாடல்கள் பிடித்திருப்பதன் ரகசியம்.
தமிழில் கடந்த 2002ல் வந்த ஆல்பம் திரைப்படத்தின் செல்லமே செல்லம் என்றாயடி பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார் இவர். தொடர்ந்து சொல்ல மறந்த கதை, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் ஆரம்ப காலத்திலேயே இளையராஜா போன்ற பெரும் இசையமைப்பாளர்களின் இசையில் பல அருமையான பாடல்களை பாடி பிரபலமானார்.
இவர் இசைஞானி இசையில் பாடிய ஜூலி கணபதியின் எனக்கு பிடித்த பாடல், மற்றும் பிதாமகனின் இளங்காத்து வீசுதே போன்ற பாடல்கள் மிக புகழ்பெற்றது.
செவன் ஜி, விருமாண்டி,அய்யா, அன்னியன் ,மெர்சல் ,விஸ்வாசம் என இன்றுவரை பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர்தான் ஸ்ரேயா கோஷல்.
பார்ப்பதற்கு பாடகியாக இவர் மட்டும் தெரிவதில்லை இவர் சினிமா கதாநாயகி போல் அழகிய தோற்றத்துடனும் இவர் இருப்பதால் இவருக்கு ரசிகர்கள் மிக அதிகம் இவருக்கு சமூக வலைதளங்களில் ஃபேன்ஸ் கிளப்களும் அதிகம்.
இன்று பிறந்த நாள் காணும் ஸ்ரேயா கோஷலை நாமும் வாழ்த்துவோம்.