முடிவுக்கு வந்தது விஜய் வீட்டில் நடந்த ரெய்டு: முக்கிய விவரத்தை வெளியிட்ட அதிகாரிகள்

சென்னை அருகே உள்ள பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் இன்று மூன்று வாகனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்று ஏற்கனவே ரெய்டு நடத்தியபோது சீலிடப்பட்ட அறை, லாக்கர்களைத் அதிகாரிகள் திறந்தனர். அதில் சில முக்கிய…


994340cd4108d6ca1844870983ca4f3c

சென்னை அருகே உள்ள பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் இன்று மூன்று வாகனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்று ஏற்கனவே ரெய்டு நடத்தியபோது சீலிடப்பட்ட அறை, லாக்கர்களைத் அதிகாரிகள் திறந்தனர். அதில் சில முக்கிய ஆவணங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்

பின்னர் பனையூர் 8வது அவன்யூவில் உள்ள நடிகர் விஜய்யின் அலுவலகத்திலும் வருமானவரித் துறையினர் ஆய்வு செய்தனர். இதனையடுத்து வருமானவரி சோதனை நிறைவு பெற்றதாக தெரிவித்த வருமான வரித்துறையினர் விஜய்யின் சம்பள விவரத்தையும் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி பிகில் படத்திற்கு 50 கோடி ரூபாயும், மாஸ்டர் படத்திற்கு 80 கோடி ரூபாயும் சம்பளமாக விஜய் பெற்றதாகவும், அந்த சம்பளத்திற்கு அவர் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

மேலும் இத்துடன் வருமான வரித்துறையின் விசாரணை முடிந்தது என்றும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன