நடிகர் ரஜினிகாந்த்தை சினிமாவில் வில்லனாக புகழ்பெற செய்தவர் பாரதிராஜா. பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் வில்லனாக நடித்து கலக்கி இருப்பார் ரஜினி. பின்பு சில வருடங்கள் கழித்து பாரதிராஜாவின் இயக்கத்தில் கொடி பறக்குது படத்திலும் நடித்தார் அந்த படத்தில் டைட்டில் போடும்போதே கருப்பு ராஜகுமாரன் என ரஜினியை அறிமுகப்படுத்தி இருப்பார் பாரதிராஜா.
இப்படியான பாரதிராஜா, ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டினால் அவரை கடுமையான வார்த்தைகளால் அர்ச்சனை செய்து வந்தார். ரஜினி அரசியலுக்கு வந்து முதல்வர் கனவில் இருப்பதை விரும்பவில்லை.
2002ம் ஆண்டு நெய்வேலியில் இருந்து கர்நாடகாவுக்கு மின்சாரம் கொடுக்காமல் நடத்திய போராட்டத்திலும் ரஜினியை விமர்சனரீதியாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் ரஜினியின் நேற்றைய பேச்சால் பாரதிராஜா ரஜினியை பாராட்டி வருகிறார். ரஜினிகாந்த் நேற்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தான் அரசியலில் வருவதற்கு மூன்று திட்டங்களை வகுத்துள்ளதாகவும், தான் கட்சிக்கு மட்டுமே தலைவராக இருக்கப் போவதாகவும், முதல்வர் பதவிக்கு வேறொருவரை நிறுத்தப் போவதாகவும் கூறியிருந்தார்.
ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலுக்கு மட்டும் அல்லாமல் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக அமைந்துள்ளது. ஆருயிர் நண்பன் என்பதை விட, சிறந்த மனிதனாக, ரஜினியின் ‘நாணய அரசியலில்’ அதன் முதல் பக்கத்திலேயே ஒரு தமிழனை ‘அரசனாக’ ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்ற மனிதத்தை, கொள்கைகளாகப் பார்க்காமல் அதை ரஜினியாக, ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன்’ என நெகிழ்ந்து போய் பேசியுள்ளார்.
இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.