இத்தனை நன்மைகளா?.. இனி எலுமிச்சை தோலை தூக்கி வீசாதிங்க!

எலுமிச்சை சாற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்பது நாம் அறிந்ததே. ஆனால் எலுமிச்சை பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அவற்றை அறிந்து கொள்வோம். இரவு உறங்க செல்லும் முன் எலுமிச்சை பழத்தில் பாதியை…

lemon

எலுமிச்சை சாற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்பது நாம் அறிந்ததே. ஆனால் எலுமிச்சை பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அவற்றை அறிந்து கொள்வோம்.

  • இரவு உறங்க செல்லும் முன் எலுமிச்சை பழத்தில் பாதியை முகத்தில் தடவிக் கொண்டு, காலையில் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளப்பாக அழகுடன் இருக்கும்.

 

  • எலுமிச்சை பழத்தோல் உடன் உப்பை சேர்த்து காயவைத்து அதை பவுடராக்கி பல்துலக்கினால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.

 

  • குளிர்சாதன பெட்டியில் எலுமிச்சை தோல் வைத்தால் மணம்வீசும். அதனால் துர்நாற்றம் இருக்காது.

 

  • எலுமிச்சை தோலை வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தவுடன் அதை பொடித்து அதனுடன் தேன், சர்க்கரை, ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் பூசி வர முகம் பளபளப்பாகும்.

 

  • எலுமிச்சை தோலின் உட்புறத்தில் உள்ள வெள்ளைத் தோலை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக அரிந்து, அதில் தேவையான அளவு வெந்நீர் ஊற்றி 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.

 

  • நகங்களை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து பின் எலுமிச்சை தோலை நகங்களின் மீது தேய்த்து கழுவி விட வேண்டும். இதனால் நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து விடும்.

 

  • எலுமிச்சை தோலை பற்களில் தேய்த்து வாய் கொப்பளித்து வர பற்களின் மஞ்சள் நிறம் நாளடைவில் மறைந்து விடும

 

  • எலுமிச்சை தோலுடன் வெள்ளை வினிகர் கலந்து அதை நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் இரண்டு வாரம் வைத்து அதை கிரானைட் மற்றும் மார்பில் தவிர அனைத்து இடத்திலும் சுத்தம் செய்யும் கலவையாக பயன்படுத்தலாம்.

 

  • வீட்டில் எறும்பு, கரப்பான் தொல்லை இருந்தால் உடனே எலுமிச்சை தோலை அறிந்து வைத்தால் போதும்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன