சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்திக்க இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அவர் மாவட்ட செயலாளர்களை சந்தித்துப் பேசினார்
ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களிடம் சில முக்கிய விஷயங்கள் குறித்து கருத்து கேட்டதாகவும் அதன் பின்னர் அவரும் சில கருத்துக்களை கூறி சில வழிகாட்டுதல்களை கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் சில நிமிடத்தில் அவர் செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது