தமிழில் ஜெமினி படம் மூலம் அறிமுகமானவர் கலாபவன் மணி. அந்த படத்தில் இவர் செய்த சேட்டைத்தனம் கலந்த வில்லத்தனம் ரசிகர்களால் வெகுவாக பாரட்டப்பட்டது.
இந்த படத்துக்கு பிறகு தமிழில் அதிகமான படங்களில் வில்லத்தனமாக நடித்து புகழ்பெற்றார் கலாபவன் மணி. அதிலும் இவர் நடித்த பாபநாசம் படத்தில் கொடூரமான போலீசாக நடித்தது ரசிகர்களை ரசிக்க வைத்தது.
இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு இவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.மர்மமான முறையில் மரணம் அடைந்ததாகவும் ரசிகர்களால் இவர் மரணம் பார்க்கப்படுகிறது.
நல்ல மிமிக்ரி கலைஞரான இவர் ஆரம்ப காலங்களில் இதுபோன்ற ஷோ நடத்தியும் வந்துள்ளார். இவர் நடித்த மலையாள படமான வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் ரீமேக்கில்தான் விக்ரம் காசி படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது