மிக சாந்தமான முறையில் பேசும் சரத்குமார்

பொதுவாக எண்பது, தொண்ணூறுகளில் சரத்குமாரை பார்த்தவர்களுக்கு தெரியும் சரத்குமாரின் அதிரடி. முதல் படமான கண் சிமிட்டும் நேரம் படத்திலேயே அதிரடி போலீசாக நடித்திருப்பார் இவர். பின்பு சில காலம் கழித்து இவர் நடித்த புலன்…

பொதுவாக எண்பது, தொண்ணூறுகளில் சரத்குமாரை பார்த்தவர்களுக்கு தெரியும் சரத்குமாரின் அதிரடி. முதல் படமான கண் சிமிட்டும் நேரம் படத்திலேயே அதிரடி போலீசாக நடித்திருப்பார் இவர்.

34604ef9c87e33748fd1316c67c1fe3c

பின்பு சில காலம் கழித்து இவர் நடித்த புலன் விசாரணை படத்தில் அதிரடி உடலமைப்புடன் நடித்திருப்பார். ஜிம் பாடிடா ஜிம் பாடினு வடிவேல் சொல்வாருல்ல அந்த மாதிரி ஒரிஜினல் ஜிம் பாடியுடன் ரசிகர்களை கவர்ந்தார். சரத்குமார் போல உடற்கட்டு வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூட அந்நாளைய ரசிகர்கள் பலருக்கு அந்த நேரத்தில் வேகம் ஏற்பட்டது. புலன் விசாரணை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சரத்குமார் தன் உடற்கட்டை காட்டி சண்டை போடும் காட்சிகள் எல்லாம் பல இளைஞர்களை கவர்ந்தது.

தொடர்ந்து பல படங்களில் அதிரடியாகவே நடித்து வந்தவர் சரத். ஒரு தீவிரமான அரசியல்வாதியாகவும் அறியப்பட்டவர்.

நேரில் இவரின் பல பேட்டிகளை பார்க்கும் ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது. ஏனென்றால் இவரின் பேட்டிகளில் எல்லாம் மிக சாந்தமாகவும் அமைதியாகவும் ஜாலியாகவும் நகைச்சுவையாகவும் மட்டுமே பேசுகிறார் சரத்குமார்.

ஆரம்ப காலங்களில் அவரின் உடற்கட்டை பார்த்து ரொம்ப டெரர் ஆனவர் ஆக இருப்பாரோ என நினைத்த அந்த நாளைய ரசிகர்கள் பலரும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பலரும் நினைப்பது போல் அல்லாமல் மிக சாந்தமான மனிதர் சரத்குமார் என அவரின் பேட்டிகள் பலவற்றை பார்க்கும்போது அறிய முடிகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன