தமிழ்த்திரையுலகின் இளம் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் சரத்குமாரின் மகளாக இருந்தாலும் தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொள்பவர் இவர். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் பெண்ணாக படத்திலும் சரி நேரிலும் சரி இவரின் குணம் இருக்கும்.
தற்போது க்ராக் என்ற படத்தில் நடித்து வருகிறார். வரலட்சுமியின் பிறந்த நாள் இன்று இதை ஒட்டி க்ராக் படப்பிடிப்பில் நடிகரும் இயக்குனமருமான சமுத்திரக்கனி மற்றும் க்ராக் பட இயக்குனர் மற்றும் படக்குழுவினர்களுடன் இவர் கேக் வெட்டி தனது பிறந்த நாளை இனிமையாக எளிமையாக கொண்டாடினார்.