விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் சாந்தனுவுக்கு டுவிட்டரில் விஜய் ரசிகர்களால் மிரட்டல் வந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் சாந்தனு அவ்வப்போது மாஸ்டர் படத்தின் ஒருசில அப்டேட்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்தார்
இந்த நிலையில் தற்போது மேலும் சில அப்டேட்களை சாந்தனு வெளியிட வேண்டும் என்றும் அப்படி வெளியிடாவிட்டால் அவரை டுவிட்டரில் இருந்து அன்பாஃலோ செய்துவிடுவேன் என்றும் விஜய் ரசிகர் ஒருவர் மிரட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஆனால் இந்த மிரட்டலை விளையாட்டாக எடுத்துக் கொண்ட நடிகர் சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இருப்பினும் விரைவில் மாஸ்டர் படத்தின் எதிர்பாராத அப்டேட் வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்