ரம்யா நம்பீசனுக்கு இப்படி ஒரு வெறித்தன ரசிகரா

மலையாளத்தில் வெளியான சாயஹ்னம் படத்தின் மூலம் கடந்த 2000ம் ஆண்டு அறிமுகமானவர் ரம்யா நம்பீசன். தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன்,சத்யா, சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இவர். நடிகை பாவனாவின் நெருங்கிய…

மலையாளத்தில் வெளியான சாயஹ்னம் படத்தின் மூலம் கடந்த 2000ம் ஆண்டு அறிமுகமானவர் ரம்யா நம்பீசன். தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன்,சத்யா, சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இவர். நடிகை பாவனாவின் நெருங்கிய தோழி இவர்.

748ac87cf6b54fe84a6a7290887912f9

நடிப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த பாடகியும் கூட இவர். சன் சிங்கர் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளில் நீதிபதியாகவும் பங்கேற்றுவருகிறார். பாண்டிய நாடு படத்தில் இடம்பெற்ற ஃபை ஃபை ஃபை கலாய்ச்சி ஃபை பாடல் உள்ளிட்ட பாடலையும் பாடியுள்ளார்.

இசைக்கு என்று தனிப்பட்ட மியூசிக் சேனல் ஒன்றையும் யூ டியூப்பில் தொடங்கி நடத்தி வருகிறார்.

அதிக படங்கள் இவர் தமிழில் நடிக்காவிட்டாலும் டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இவரை பின் தொடரும் ரசிகர்கள் அதிகம்.

ரம்யாவின் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் ஒரு அக்கவுண்ட் வைத்துள்ளார். அந்த அக்கவுண்ட் பெயர் ரம்யா நம்பீசனின் பாதசேவகன். டைட்டிலே அவர் எவ்வளவு பெரிய ரம்யாவின் ரசிகர் என தெரிகிறது.

ரம்யாவுக்கு இப்படியும், போர்ப்படை தளபதி ரசிகர்கள் ரேஞ்சில் ரசிகர்கள் உள்ளனர் என்பது ஆச்சரியமான விசயம்தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன