சுஜாதாவின் கதாபாத்திரத்தை கண் முன் கொண்டு வந்த மனோரமா

தமிழ் சினிமாவில் மனோரமா ஆச்சியை தெரியாதோர் இருக்க முடியாது.தஞ்சை மாவட்டத்தில் பிறந்து செட்டிநாடு என சொல்லப்படும் காரைக்குடி பகுதியில் வசித்ததால் இந்த பெயர் ஏற்பட்டது. பல்வேறு திரைப்படங்களில், நகைச்சுவை, குணச்சித்திரம், கதாநாயகனுக்கு அம்மா, பாட்டி…

தமிழ் சினிமாவில் மனோரமா ஆச்சியை தெரியாதோர் இருக்க முடியாது.தஞ்சை மாவட்டத்தில் பிறந்து செட்டிநாடு என சொல்லப்படும் காரைக்குடி பகுதியில் வசித்ததால் இந்த பெயர் ஏற்பட்டது.

1e22a82c1ef780c63087bd1d757b65cd-1

பல்வேறு திரைப்படங்களில், நகைச்சுவை, குணச்சித்திரம், கதாநாயகனுக்கு அம்மா, பாட்டி போன்ற கனமான வேடங்களில் நடித்து மனதை கவர்ந்தவர் இவர்.

இவர் பல்வேறு படங்களில் பலவிதமான படங்களில் நடித்து இருந்தாலும், கொங்கு நாட்டு கிராமிய பாடல்களை பாடி அசத்தும் கிழவியாக இவர் நடித்த திரைப்படம் கரையெல்லாம் செண்பகப்பூ, இப்படத்தின் கதை மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதி ஆனந்த விகடன் இதழில் வந்து வெற்றி பெற்றது.

இக்கதையை திரைப்படமாக ஜி என் ரங்கராஜன் இயக்கினார். இப்படத்தில்தான் மனோரமாவுக்கு இப்படியொரு கனமான வேடம். இதில் பாட்டு பாடுவது தன் வேலையாக இருந்தாலும் எந்த பொருள் எங்கு இருந்தாலும் லபக்கென்று அந்த பொருளை திருடும் வேலையையும் செய்வார் மனோரமா. அதே போல கொங்கு நாட்டு கிராமிய தமிழை அசத்தும் வகையில் பாடியும் பேசியும் நடித்திருப்பார் மனோரமா.

மனோரமாவின் நடிப்பில் சிறந்ததொரு மணிமகுடம் இத்திரைப்படம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன