அமெரிக்காவின் ஒரு ஹோட்டலில் தாங்கள் ஆர்டர் செய்த உணவு இல்லாததால் ஹோட்டல் ஊழியரை சகோதரிகள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அங்குள்ளோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் அருகே உள்ள வௌவடோசா பகுதியில் வசிப்பவர்கள்தான் பிரேண்டா மற்றும் ப்ரயன்னா என்ற ட்வின் சிஸ்டர்ஸ். இவர்கள் நேற்று முன் தினம் இரவு உணவினை ஹோட்டலில் சாப்பிட எண்ணியுள்ளனர். அதன்படி சிஸ்டர்ஸ் இருவரும் தங்களின் பேவரைட் ஹோட்டலான விஸ்கான்சின் ஹோட்டலில் ஆர்டர் செய்துள்ளனர்.
அதன்பின்னர் அந்த ஹோட்டல் ஊழியரான ரொட்ரிகோஸ் உணவினை டோர் டெலிவரி செய்யச் சென்றுள்ளார்.
அப்போது அவர்கள் அந்த உணவு லிஸ்ட்டில் தாங்கள் ஆர்டர் செய்த பேவரைட் உணவான ஹாம்பர்கர் இல்லை என்பதைக் கணடறிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் பணம் தர மறுத்துள்ளனர்.
அதனால் கடுப்பான ஊழியர் உணவு பார்சல்களை தூக்கி எறிய சகோதரிகள் தங்களிடம் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அருகில் இருந்தோர் ரொட்ரிகோஸை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மேலும் சிஸ்டர்ஸ் இருவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட அவர்களுக்கு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஹாம்பர்கருக்காக ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய முயன்ற சம்பவம் அங்குள்ளோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.