உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகாவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் முடிந்துள்ளது
இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மார்ச் இறுதியில் படப்பிடிப்பு நடத்த இயக்குநர் ஷங்கர் திட்டமிருந்ததார். ஆனால் தற்போது சீனா தாய்லாந்து நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் படப்பிடிப்பு திட்டம் மாற்றப்பட்டுள்ளது.
சீனாவுக்கு பதில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை இத்தாலியில் வைத்து கொள்ளலாம் எனவும், தாய்லாந்துக்கு பதில் இலங்கையில் படமாக்கவும் இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது