இந்தியன் 2’படப்பிடிப்பில் நேற்று நடந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விபத்தில் பலியான 3 பேருக்கும் தலா ரூபாய் ஒரு கோடி நிதியுதவி அளிப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்
கமலஹாசன் தனது சொந்த பணத்தில் ரூபாய் 3 ரூபாய் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
மேலும் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது ’இந்த விபத்து எனது குடும்பத்தில் நடந்ததாகவே கருதுகிறேன். சினிமா துறையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதை இந்த விபத்து உறுதி செய்கிறது. உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு எனது சார்பில் ரூபாய் ஒரு கோடி நிதியுதவி அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்
கமலஹாசன் இந்த அறிவிப்பால் பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு சற்று ஆறுதலான விஷயமாக கருதப்படுகிறது