சந்தானம் யோகி பாபு உள்பட பல காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறி வரும் நிலையில் தற்போது பிரபல காமெடி நடிகர்களில் ஒருவரான மொட்டை ராஜேந்திரனும் ஹீரோவாக மாறியுள்ளார். அவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்திற்கு ராபின்ஹூட் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
ராபின்ஹூட் என்றாலே பணக்காரர்களிடம் இருந்து பிடுங்கி ஏழைகளுக்கு தானம் செய்பவர் என்றுதான் பொருள் அப்படி ஒரு கேரக்டரில் தான் மொட்ட ராஜேந்திரன் நடிப்பதால் இந்த படத்திற்கு ராபின்ஹூட் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் கார்த்திக் பழனியப்பன் கூறியுள்ளார்
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தில் அம்மு அபிராமி நாயகியாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது இந்த படம் வரும் மே மாதம் ரிலீசாக உள்ளது