தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடந்தபோது அதில் காயமடைந்தவர்களை ரஜினிகாந்த் சந்திக்கச் சென்றபோது ஒரு இளைஞன் ’யார் நீங்க’ என்று ரஜினியை கேள்வி கேட்டார். அந்த இளைஞரிடம் அமைதியாக ரஜினிகாந்த் ’நான் தாம்பா ரஜினிகாந்த்’ என்று கூறினார்
இந்த இதுகுறித்து ரஜினியின் எதிரிகள் ’நான் தாம்பா ரஜினிகாந்த்’ என்ற ஹேஷ்டேக்கை டிரண்டுக்கு கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஜினியை யார் என்ற கேள்வி கேட்ட சந்தோஷ் தற்போது பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்
தற்போது இந்த சம்பவத்திற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். நான் தாம்பா ரஜினிகாந்த் என்று ஹேஷ்டேக் உருவாக்கியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நான் தாம்பா பைக் திருடன் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்
நல்லங்களுக்கு எப்போதும் சோதனை வரும் ஆனால் நல்லவர்களை கடவுள் கைவிடமாட்டார் நல்லவர்களை பார்த்து யார் நீங்க என்று கேள்வி எழுப்பி அவமானப்படுத்திய சந்தோஷ் தற்போது திருடன் என்று தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது