தல அஜித்தின் ரசிகர்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பாக சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்கள் கொடி கட்டி பறந்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் அஜித்துக்காக ஒரு தனி இணையதளம் ஒன்றை ஆரம்பிக்க அஜித் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்
இந்த இணையதளத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த இணையதளம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த இணையதளங்கள் அஜித் நடித்து வரும் தற்போதைய படங்கள் குறித்த விபரங்கள் சூட்டிங்கில் நடைபெறும் சம்பவங்கள் அஜித் நடித்த பழைய படங்களின் விபரங்கள் அவருடைய பிளாக்பஸ்டர் படங்கள் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும் என தெரிகிறது
அஜீத்தின் ரசிகர்கள் இந்த இணைய தளத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது