ஆப்கானிஸ்தானில் சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அமெரிக்க இராணுவம் சொந்தநாடு திரும்பியதும் தாலிபான்கள் தங்கள் ஆட்சியை அமைத்தனர்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்னர் பல்வேறு விதிமுறைகளை விதித்தனர். ஆனால் பெரிய அளவில் பொருளாதார நிலையில் கவனம் செலுத்தாததால் மக்கள் அங்கு வறுமையில் வாடி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளிகள் தற்போது மூடப்பட்டுள்ளது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாததால் ஆப்கானிஸ்தானில் உள்ள பூங்காவில் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தி வருகிறார் காபூலைச் சார்ந்த பெண் ஒருவர்.
காபூலில் உள்ள பூங்கா ஒன்றில் சோடா நஜந்த் என்ற பெண் குழந்தைகளுக்கு ஆப்கானிஸ்தானி கற்றுக் கொடுக்கிறார். அதுபோக கணிதத்தையும் கற்றுக் கொடுக்கிறார். அடுத்து குரானைக் கற்றுக் கொடுத்து வருகிறார்.
அடுத்து ஆங்கிலத்தைக் கற்றுத் தர திட்டமிட்டுள்ளார். அந்த பூங்காப் பள்ளியில் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த குழந்தைகள் பிச்சை எடுப்பதைப் பார்த்து வருத்தப்பட்டு அவர்களின் பெற்றோரிடம் கூறி படிக்கச் சேர்த்துள்ளார்.
சோடா உயர்நிலைப் பள்ளி பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவரது செயல் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து பலரும் சோடாவுக்குத் தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.