விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நேற்று நெய்வேலியில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு சில பாஜகவினர் வந்து போராட்டம் நடத்தினார்
இந்த போராட்டத்தை கேள்விப்பட்ட உள்ளூர் விஜய் ரசிகர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போராட்டம் செய்த பாஜகவினர் காணாமல் போனதும் குவிந்த விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று காலையிலிருந்தே விஜய் மக்கள் மன்றத்தினர் தொடர்ச்சியாக கார்களில் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்திற்கு வேறு யாரும் பாதுகாவலர்கள் தேவை இல்லை விஜய் ரசிகர்களை போதும் என்ற அளவுக்கு விஜய் ரசிகர்கள் குவிந்ததால் இனிமேல் பாஜகவினர் போராடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்