தளபதி விஜய் நினைத்திருந்தால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் போராட்டம் செய்தவர்களை அடித்து விரட்டி இருக்கலாம் என்றும் ஆனால் அவர் மெச்சூரிட்டியாக நடந்துக் கொண்டார் என்றும் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்
மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் ஒருசிலர் போராட்டம் நடத்தியது கொச்சைத்தனமானது என்றும் விஜய் நினைத்திருந்தால் தனது ரசிகர்களை உடனடியாக வரவழைத்து போராட்டக்காரர்களை அடுத்து விரட்டி இருக்கலாம் என்றும் ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் மெச்சூரிட்டியாக நடந்து கொண்டதால் அந்த இடத்தில் வன்முறை தவிர்க்கப்பட்டது என்றும் அதற்காக விஜய்க்கு பாராட்டுகள் என்றும் தெரிவித்துள்ளார்
விஜய் வீட்டில் ரெய்டு நடந்ததில் அரசியல் பின்னணி உள்ளது என்றும் உண்மையாகவே விஜய் முறைகேடு செய்திருந்தால் அவருக்கு கால அவகாசம் கொடுத்து அவரிடம் விசாரணை செய்து இருக்கலாம் என்றும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தூக்கி வந்து விசாரணை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்