சர்ச்சைக்குரிய இயக்குனரான ராம்கோபால் வர்மாவின் மகள் ரேவதி வர்மாவுக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில் எந்தவித அறிவிப்பும் செய்யவில்லை
இருப்பினும் இதனை தெரிந்துகொண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி, ராம்கோபால் வர்மாவுக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீங்கள் தாத்தாவாக புரமோஷன் ஆனதற்கு எனது வாழ்த்துக்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
ராம்கோபால் வர்மா தற்போது ஹைதராபாத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் டாக்டர் குறித்த உண்மை சம்பவத்தை திரைப்படமாக இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது