தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தில் கௌரி கிஷன் என்ற நடிகை இணைந்துள்ளார் இவர் விஜய் சேதுபதி திரிஷா நடித்த ’96’ என்ற படத்தில் குட்டி த்ரிஷாவாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது
கர்ணன் படத்தில் அவருக்கு முக்கிய கேரக்டர் என்றும் இந்த கேரக்டர் அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தரும் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்து விடும் என்றும் வரும் கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது