நடிகர் விக்ரம் நடித்துவரும் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்ட நிலையில் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் விக்ரம் மகன் என்ற ஒரு சிறு கேரக்டர் உள்ளது என்றும் அதில் விக்ரம் மகன் துருவ்வை நடிக்க வைக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது
ஆனால் தற்போது வந்துள்ள செய்திகளின் படி இந்த கேரக்டரில் மலையாள இளம் நடிகர் சார்ஜன் கலித் என்பவர் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ’ஜூன்’ என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது
விக்ரம் சார்ஜன் கலித் நடிக்க இருக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் படமாக்கப்பட உள்ளது. ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது