தல அஜித் தற்போது 64 ஆவது படத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில படங்கள் மட்டுமே நடிப்பேன் என அவர் பிரபல நடிகர் ஒருவரிடம் கூறியிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
லொள்ளுசபா சாமிநாதன் என்ற நகைச்சுவை சமீபத்தில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் வேதாளம் படத்தில் அஜித்துடன் தான் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் பற்றி விசாரித்தார் என்றும், அப்போது அவர் ’நான் இன்னும் ஒரு சில படங்களில் மட்டுமே நடிப்பேன் மக்களாக என்னை வெளியேறு என்று சொல்லும் முன்னர் நானே சினிமாவை விட்டு வெளியேறி விடுவேன் என்று கூறியதாக கூறினார்
சாமிநாதனின் இந்த பேட்டி அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அஜித் இன்னும் சில ஆண்டுகள் உறுதியாக நடிப்பார் என்று அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.