சிம்புவின் அடுத்த படத்தில் ஜோடியாகும் பிக்பாஸ் நடிகை

சிம்பு ஜோடியாக பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் ஒரு படத்தில் நடிக்க உள்ளது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. மக்வென் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் மகத், வெங்கட் பிரபு மனோபாலா உள்ளிட்ட…


de63c1b750b56f4ecf5177dac65f4fd0

சிம்பு ஜோடியாக பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் ஒரு படத்தில் நடிக்க உள்ளது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. மக்வென் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் மகத், வெங்கட் பிரபு மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

பரதன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மனோபாலா, மாகாபா, உள்ளிட்ட பலர் நடிக்கவிருப்பதாகவும் தமன் இசையமைக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 12ஆம் தேதி முதல் கோவையில் நடைபெறவுள்ளது என்பதும், இதனையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன