யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்!

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடித்து வரும் காமெடி கேரக்டர்களுடன் கூடிய படங்களும் ஹீரோவாக நடித்து வரும் படங்களும் தொடர் வெற்றியைப் பெற்று வருகின்றன. இதனால் அவருக்கு படங்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது…


42f0e324f5f9097c443db9e45b861ec7

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடித்து வரும் காமெடி கேரக்டர்களுடன் கூடிய படங்களும் ஹீரோவாக நடித்து வரும் படங்களும் தொடர் வெற்றியைப் பெற்று வருகின்றன. இதனால் அவருக்கு படங்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் இன்னொரு திரைப்படத்தின் டைட்டில் காக்டெயில் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சற்றுமுன் ரிலீஸ் ஆகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல இயக்குனர் பிஜி முத்தையா தயாரிக்கும் இந்த படத்தை விஜய் முருகன் என்பவர் இயக்க உள்ளார். சாய் பாஸ்கர் என்பவர் இசையமைக்கும் இந்த படத்திற்கு நவீன் ஒளிப்பதிவும் பாசில் படத்தொகுப்பும் செய்துள்ளனர்

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி கதையைக் கொண்டது என்றும் இந்த படத்தில் கடவுளை நையாண்டி செய்யும் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன