ஐந்தறிவு உயிரினங்கள் ஆறறிவு உள்ள மனிதர்களிடம் அன்பு காட்டி அவர்களின் வீட்டின் ஒரு நபராகவே ஆகிவிடுவதை நாம் பார்த்திருப்போம்.
அந்தவகையில் கோவை மாவட்டத்தின் அருகே உள்ள பாப்ப நாயக்கன் பாளையத்தினைச் சார்ந்தவர் ஹரிஹரன், இவர் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார்.
கொரோனா அச்சுறுத்தலால் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்றி வருகிறார் ஹரி. கடந்த ஜுன் மாதம் இவர் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தபோது அணில் ஒன்று காயம் ஏற்பட்ட நிலையில் வீட்டிற்கு வந்துள்ளது.
அதனைப் பார்த்த ஹரி அணிலைத் தூக்கி அதன் காயத்தினைப் போக்கும் வகையிலான மருத்துவ சிகிச்சைகளைச் செய்துள்ளார். அந்த அணில் காயத்தில் இருந்து மீண்டதும் அனுப்பலாம் என நினைத்திருந்த ஹரியுடன் அணில் நாளடைவில் ஒட்டிக் கொண்டது.
அணிலை வீட்டிலேயே வைத்து வளர்க்கத் திட்டமிட்ட ஹரி அணிலுக்கு அப்பு என்று பெயர் சூட்டியுள்ளார்.
அணில் ஹரி எங்கு சென்றாலும் போவதையே தற்போது வழக்கமாகக் கொண்டுள்ளது, அணிலுடன் சுற்றும் ஹரியை எல்லோரும் மிகவும் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.