
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி மோதும் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளது
ஏற்கனவே இந்த படம் 70% வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் இம்மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து புரமோஷன் பணிகள் தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வரும் நடிகர் சாந்தனு சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது ‘மாஸ்டர்’ படத்தில் தன்னுடைய கேரக்டர் தான் அழுத்தமாக இருக்கும் என்றும் கதையில் தன்னுடைய கேரக்டரை நீக்கிவிட்டால் சுவாரசியம் இருக்காது என்றும் நான் இல்லை என்றால் ‘மாஸ்டர்’ படமே இல்லை என்றும் கூறியுள்ளார்
விஜய் நடிக்கும் ஒரு படத்தில் தன்னுடைய கேரக்டர் தான் விஜய் கேரக்டரை விட முக்கியம் என்று சாந்தனு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
