‘பிகில்’ ரூ.300 கோடி வசூல் எதிரொலி: ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் இன்று காலை முதல் திடீரென அதிரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ்…


7d5dd0cba9dde39eccfb44d1df34cb50

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் இன்று காலை முதல் திடீரென அதிரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அந்த படத்தால் மிகப்பெரிய லாபம் பெற்றதாகவும் அந்தப் படம், ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது

இதனை அடுத்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒருபக்கம் பிகில் படம் பெரிய அளவில் லாபம் கொடுத்தது என்று கூறப்பட்டாலும் இன்னொரு பக்கம் பிகில் திரைப்படம் நஷ்டம் என்றும் போட்ட முதலீடு கூட தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது

எனவே வருமானவரித்துறை ரெய்டு பின்னர் பிகில் திரைப்படத்தின் உண்மையான வசூல் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன