மாஸ்டர் படப்பிடிப்பு திடீர் ரத்து: அரசு அதிகாரிகள் விஜய்யை அழைத்து சென்றதால் பரபரப்பு

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென அங்கு வந்த வருமான வரித்துறைஅதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இன்று காலை…


144891f611a50f182227e012ce7c7202

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென அங்கு வந்த வருமான வரித்துறைஅதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இன்று காலை முதல் பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தி வரும் நிலையில் திடீரென நெய்வேலிக்கு வந்த வருமான துறை அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று சம்மனை கொடுத்தனர்

இந்த சம்மனை ஏற்றுக்கொண்ட விஜய் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சென்றதால் ’மாஸ்டர்’ படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. பிகில் படத்தின் தயாரிப்பு குறித்தும், அந்த படத்தில் அவர் வாங்கிய சம்பளம் கொடுத்தும் விஜய்யிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன