சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகவிருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் இந்த படப்பிடிப்பு தொடங்கும் சரியான தேதி குறித்த அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை
இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சற்றுமுன் தன் டுவிட்டர் பக்கத்தில் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதியை நாளை மாலை 6 மணிக்கு அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்
சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா , மனோஜ் பாரதிராஜா, கருணாகரன், எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது