இரண்டாவது முறையாக பறிக்கப்பட்ட மிஸ்ஸஸ் ஸ்ரீலங்கா பட்டம்.. மாடல் அழகி அப்படி என்னதான் செய்தாராம்!

By Gayathri A

Published:

இலங்கையில் பல ஆண்டுகளாக மாடலிங்க் துறையில் பணியாற்றிவரும் புஷ்பிகா டி சில்வா, சில ஆண்டுகளுக்கும் முன்னர் இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற தேசிய அழகிப் போட்டியில் பங்கேற்றார்.

இந்தப் போட்டியில் புஷ்பிகா டி சில்வா மிஸ்ஸஸ் ஸ்ரீலங்கா என்ற பட்டத்தைப் பெற்றார். மேலும் பட்டத்தை வென்ற சிறிது நேரத்தில் மேடையில் வைத்தே புஷ்பிகா டி சில்வாவின் கிரீடம் நிகழ்ச்சியின் நடுவர் கரோலினால் மீண்டும் வாங்கப்பட்டது.

இவ்வாறு பட்டம் மற்றும் கிரீடம் பறிக்கப்பட்டது குறித்து கரோலின் கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதன்பின்னர் வழக்கு சாதகமாக இவருக்கு மிஸ்ஸஸ் ஸ்ரீலங்கா என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் புஷ்பிகா அழகு ராணி கொண்டிருக்க வேண்டிய சில நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கத்தை மீறிய காரணத்திற்காக  அவரின் அழகி பட்டம் இரண்டாவது முறையாகப் பறிக்கப்பட்டுள்ளது.

புஷ்பிகா இவ்வாறு செயல்பட்டதால் இலங்கை அரசு கடுப்பாகி புஷ்பிகா மிஸ்ஸஸ் ஸ்ரீலங்கா என்ற பெயரை எந்த விளம்பரத்திலும் பயன்படுத்த கூடாது என்று அறிவித்துள்ளது.

உலக அளவில் இலங்கையினை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கியதால் இலங்கை அரசு இத்தகைய முடிவினை எடுத்துள்ளது.

 

 

Leave a Comment