கடந்த இரண்டு நாட்களாக அஜித் ரசிகர்களுக்கும், நடிகை கஸ்தூரிக்கும் நடந்துவரும் விவாதங்கள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. இந்த விவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளியே கிடையாதா என்ற அளவுக்கு இன்னும் தொடர்ந்து விவாதம் நடந்துகொண்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கஸ்தூரிக்கு அறிவுரை கூறும் வகையில் ஒருவர் ’தங்களுக்கு பிடித்த பிரபலத்தை பற்றி யாராவது குறை கூறினால் சம்பந்தப்பட்ட பிரபலத்தின் ரசிகர்கள் வெறி பிடித்த நாய்களை போல் குதறுவது என்பதில் யாருமே விதிவிலக்கில்லை என்றும், இதை அறிந்து நாம்தான் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்
இதற்கு கஸ்தூரி பதில் கூறியதாவது: உங்க அளவுக்கு அறிவு எனக்கு இல்லை சார். 7 பேர் சேர்ந்து யாரை மேட்டர் பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்ணுவாங்க, அவங்க அத்தனை பேரும் அஜித் ரசிகர்கள் என்னும்போது அதுதான் எனக்கு தெரியும். ஏன்னா நானும் அஜித் ரசிகை. அந்த நல்ல மனுஷர் பேரை வச்சுக்கிட்டு ஆபாசமா பேசுறவன அப்படித்தான் திட்டுவேன் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது