’வடசென்னை’ படத்திற்கு ஏன் விருது கிடைக்கவில்லை: இயக்குனர் அமீர் ஆவேசம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை படத்திற்கு விருது கிடைக்காததற்கு காரணம் அரசியல் என்று இயக்குனர் அமீர் சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசியுள்ளார் இந்த விழாவில் அவர் மேலும் பேசியதாவது: இந்தியாவின்…


85cbdaa4fa9d1dbc171de4155f43c577

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை படத்திற்கு விருது கிடைக்காததற்கு காரணம் அரசியல் என்று இயக்குனர் அமீர் சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசியுள்ளார்

இந்த விழாவில் அவர் மேலும் பேசியதாவது: இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் என்றும் அவர் தமிழ்நாட்டில் இருப்பது நமக்கெல்லாம் பெருமை என்றும் கூறினார்

வடசென்னை படத்தில் தனுஷ் உள்பட 3 குறைந்தபட்சம் மூன்று விருதுகள் கிடைத்திருக்க வேண்டும் என்றும் ஆனால் ஒரு சில அரசியல் காரணங்களால் அந்தப் படத்திற்கு விருது கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்

மேலும் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள அசுரன் படத்திற்கு இந்த ஆண்டு விருது கிடைக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த தேசிய விருதை நாங்கள் புறக்கணிப்போம் என்று அவர் பேசியுள்ளார். அமீரின் இந்த பேச்சு கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன