திமுக ஏன் ரஜினியை விமர்சிக்கவில்லை: கஸ்தூரி கூறும் திடுக்கிடும் காரணம்!

பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி கட்சி நடத்துவதாக கூறிக்கொள்ளும் திமுக, ரஜினி விஷயத்தில் அடக்கி வாசிப்பது ஏன்? என நடிகை கஸ்தூரி தனது ஃபேஸ்புக்கில் ஒரு நீண்ட பதிவை பதிவு செய்துள்ளார். அது இதுதான்: ஒரே…


384a123dbfd1d0dcc8b882cf0f2d02b2-1

பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி கட்சி நடத்துவதாக கூறிக்கொள்ளும் திமுக, ரஜினி விஷயத்தில் அடக்கி வாசிப்பது ஏன்? என நடிகை கஸ்தூரி தனது ஃபேஸ்புக்கில் ஒரு நீண்ட பதிவை பதிவு செய்துள்ளார். அது இதுதான்:

ஒரே நாளுலே ஒரே கட்சிக்காரங்க ஆளுக்கொரு விதமா பேசினா பாவம் மக்கள் எதைன்னு எடுத்துக்கறது? என்கினாச்சும் சொகுசு ரிஸார்ட்டுக்கு போயி கூடி ஒரு முடிவு எடுத்து வரலாமில்லை? அவங்க சொந்த மீடியாவே குழம்பறாங்க!

0dd4b250e672e7030f10973733549c06-3

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் பெரியாரை விமர்சித்த ரஜினியை திமுகக்காரர்கள் தாக்காமல் நாசூக்காக வலிக்காமல் கருத்து சொல்கிறார்கள். திரு ஜெயக்குமார், ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள்தான் அதிகமாக எதிர்க்கிறார்கள். அதிலும் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் சௌந்தர்யாவையும் அவரது கணவர் விசாகனையும் பற்றி பேச அவசியம் என்ன?

கொஞ்சம் யோசித்து பார்த்தால் இதிலுள்ள அரசியல் புரிகிறது. பெரியாரை புகழ்ந்த மாதிரியும் ஆயிற்று, ரஜினியை விமர்சித்த மாதிரியும் ஆயிற்று, திமுக பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த விசாகன் பெயரை இழுத்ததன் மூலம் திமுகவை தர்மசங்கப்படுத்திய மாதிரியும் ஆயிற்று. பாவம் திமுக , ரஜினி 168 , சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் புண்ணியத்தில் ஏற்கனவே திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் தான் உள்ளனர்.

8e5582117f2f9147cc8374cc6775634f

கடந்த எத்தனையோ வருடங்களாக அதிமுக வை யாரும் பெரியாருடன் இணைத்து பார்த்ததில்லை. ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையும் கொள்கைகளும் பெரியாரிய அரசியலும் எதிர் எதிர் துருவங்கள். மேலாக, பிஜேபியும் அதிமுகவும் தோழமை கட்சிகள் என்னும் போது அம்மா வழி வந்த அமைச்சர்கள், இன்று இப்படி பேசுவதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? ஒரு வேளை ரஜினி வந்துவிட்டால் அதிமுகவை பிஜேபி இரண்டாம் பட்சமாக நடத்தும் என்ற சந்தேகமோ?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன