ஒரு ரசிகர் கூட வராமல் காலியான தியேட்டர்: தீபிகா படுகோனே படத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்

தீபிகா படுகோனே நடித்த ’சப்பக்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்க்க ஒரு ரசிகர் கூட வராததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது சமீபத்தில்…


b2b1071ff9e1952594dbfe55dd70ce0a-1

தீபிகா படுகோனே நடித்த ’சப்பக்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்க்க ஒரு ரசிகர் கூட வராததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் டெல்லி மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு கொடுத்ததை அடுத்து தீபிகா படுகோன் மீது ஆளும் கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர் ஒருபக்கம் எதிர்க்கட்சியினர் மற்றும் மாணவர்கள் ஆதரவு கொடுத்து வந்த போதிலும் ஆளும் கட்சியினர் தங்கள் வேலையைக் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ’சப்பக்’ வெளியாகவிருந்த தியேட்டர் முன் ’இந்த படத்தை பார்க்க வருபவர்கள் இன்சூரன்ஸ் செய்து விட்டு வரவும்’ என்று எச்சரிக்கை விடும் வகையில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததாம்

இந்த போஸ்டர் காரணமாக இந்த தியேட்டருக்கு படம் பார்க்க ஒரு ரசிகர் கூட வரவில்லை என்றும் இதனால் காட்சி ரத்தாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தீபிகா படம் வெளியாகிய முதல் நாளில் ஒரு ரசிகர் கூட வராததால் காட்சி ரத்து செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன