பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் திடீரென இன்று தற்கொலை முயற்சி செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
வம்சம் என்ற தொடரில் வில்லி கேரக்டரில் நடித்தவர் ஜெயஸ்ரீ. இவர் வேறு சில தொலைக்காட்சி தொடர்களிலும் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆபீஸ் என்ற தொடர் உள்பட ஒரு சில தொடர்களில் ஈஸ்வர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இருவரும் சில மாதங்கள் மட்டும் ஒற்றுமையாக குடும்பம் நடத்திய நிலையில் திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவர் ஈஸ்வர் மற்றும் அவரது தாயார் தன்னை கொடுமைப்படுத்துவதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் ஜெயஸ்ரீ புகார் மனு அளித்திருந்தார். மேலும் ஈஸ்வர் தன்னை மிரட்டுவதாகவும் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் அவர் தனது புகாரில் கூறியிருந்தார்
இந்த நிலையில் இன்று திடீரென ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி செய்துள்ளதை அடுத்து அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது ஜெயஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம் என்பது அவர் கண் விழித்தால் மட்டுமே தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்