சிம்பு நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு ஆண்டு முடிந்துவிட்ட நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.
இந்த நிலையில் சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தேதி மற்றும் இந்த படத்தின் முழு தகவல்கள் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சற்றுமுன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதனால் சிம்புவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகவிருக்கும் இந்த படம் 2021ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என தெரிகிறது