அமரர் கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன். இந்த நாவலை படமாக்குவதென்பது சவாலான காரியம்தான். இதுவரை பல நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்க முயற்சி எடுத்து டிவி சீரியலாக எடுப்பது கூட கஷ்டம் என நழுவி விட்டது.
அதிக பொருட்செலவு எவ்வளவு செலவு செய்தாலும் கதையை இரண்டரை மணி நேரத்தில் சொல்ல முடியாத நிலைமை என இருக்க இயக்குனர் மணிரத்னம் திரைக்கதை அமைத்து பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து இயக்க முடிவு செய்துள்ளார்.
விரைவில் தாய்லாந்து பகுதிகளில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.