தமிழில் நடிகர் விஜய்க்கு இருக்கும் வெறித்தன ரசிகர்கள் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு உண்டு. விஜய் நடித்த பல படங்கள் இவர் நடித்த ஆக்சன் படங்களின் ரீமேக்தான். போக்கிரி, மற்றும்கில்லி போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
இந்த வருட பொங்கலுக்கு மகேஷ்பாபு நடித்த சரிலேரு நீக்கவேரு படம் ரிலீஸ் ஆகிறது. இதை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கியுள்ளார்.
பக்கா ஆக்சன் படமான இந்த படத்தில் மகேஷ்பாபுவின் சகோதரியாக நடிகை விஜயசாந்தி நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்துள்ளார்.